மைத்திரி, மஹிந்த, சந்திரிக்கா ஒரே மேடையில் இணைக்கும் கூட்டம் ஒத்தி வைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை ஒரே மேடையில் இணைக்கும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் எதிர்வரும் 10ம் திகதி ஹொரணயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்திற்கான ஒழுங்கமைப்பு பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க மேற்கொண்டிருந்தார்.ரட்னசிறி விக்ரமநாயக்கவின் அரசியல் வாழ்க்கைக்கு 55 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசியலமைப்பு குறித்த பாராளுமன்ற விவாதங்கள் நடைபெறவிருப்பதனால், ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உத்தரவிற்கு அமைய இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply