கூட்டமைப்பை பதிவு செய்த கட்சியாக ஏற்க கூடாது ஆனந்த சங்கரி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்த அரசியல் கட்சியாக ஏற்க கூடாதென தமிழா் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். நான்கு அரசியல் கட்சிகள் பங்காளியாக இணைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, 2003ஆம் ஆண்டு மீள்கட்டியெழுப்பட்ட பின்னர் தமது கட்சி கூட்டமைப்பில் இருந்து விலகிக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் பாரிய குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தேர்தல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply