ஈராக்கின் நிம்ரூத் நகர் மீது தாக்குதல்: பழங்காலச்சின்னங்கள் அழிப்பு

ஈராக்கின் பழமையான நகரமான நிம்ரூத் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். ஈரக்கில் உள்ள நிம்ரூத் நகரத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏராளமான பாரம்பரியச் சின்னங்கள் உள்ளன. இச்சின்னங்கள் அஸ்ஸிரிய கிறிஸ்துவர்கள் பழங்காலச் சின்னங்களாகப் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகள் இச்சின்னங்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பெரும்பாலான பாரம்பரியச் சின்னங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply