அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதாக அறிவிப்பு
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி க்ளிண்டன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், அவர் சிறந்த அதிபராக செயல்பட முடியும் என்று ஒபாமா பாராட்டுதெரிவித்துள்ளார். 2009 முதல் 2013 ஆம் ஆண்டுவரை ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பு வகித்த ஹிலாரி கிளிண்டன், அப்பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதற்கான பணிகளை ஹிலாரி கிளிண்டன் மேற்கொண்டு வருகிறார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை அவர் முறைப்படி நாளை அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அவரது பேச்சு அடங்கிய வீடியோ நாளை சமூக வலைதளங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே, பனாமா உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபர் பதவிக்கு முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஏற்றவர் என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply