ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு கூட்டமைப்பு ஏன் முயலவில்லை?- ஸ்ரீசபாரத்தினத்தின் நினைவு நாளில் உதயராசா கேள்வி

ஸ்ரீ ரெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் அவர்களின் நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை 05.05.2015 மாலை 05 மணி அளவிலே அவர் இறந்ததாக கருதப்படும் இடத்திலே அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரீசபாரத்தினம் அவர்களின் 29 ஆவது வருட அஞ்சலி நிகழ்வானது ஸ்ரீ ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்விலே ஸ்ரீசபாரத்தினம் அவர்களது சம கால போராளிகளாக இருந்த திரு.சுபாஸ், திரு.சிவம், திரு.சேனாதி, திரு.ரஞ்சன், திரு.ஜெயம் போன்றோருடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீ ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள்,

அனைவரும் ஒற்றுமையாக நான் நீ என்ற பேதம் இன்றி பழையனவற்றை மறந்து மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு 25 வருடங்களாக சிறைக் கொட்டடியில் வாடும் தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்ய கூட்டமைப்பு இன்று வரை முயற்சிக்கவில்லை.

இந்த மனிதாபிமான விடயத்தில் அவர் புலிகள் இயக்க உறுப்பினர், இவர் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் என்கிற விடயங்களை விட்டு விட்டு இத்தனை வருடங்களாக சிறையில் வாடும் எம் சக தமிழர்களை ஏன் சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்ய வைக்க முடியாது? தமிழ் மக்களை வாக்களிக்கச் சொல்லி புதிய அரசைக் கொண்டு வந்த கூட்டமைப்பினர் இந்திய அரசோடும் நல்லுறவு நிலையிலேயே உள்ளனர்.

காலம் கனிந்து வந்துள்ள இந்த வேளையில் ஒற்றுமையாகச் செயற்பட்டு ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு இதுவரை முயற்சிக்கவில்லை என்பது உலகத் தமிழினத்துக்கே பெரும் துயராக உள்ளது.

நரேந்திர மோடி அரசுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடாத்தி அவர்களின் சிறை வாழ்க்கைக்கு முடிவு கட்ட கூட்டமைப்பு உடனடியாக முன்வர வேண்டும். என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply