ஆஸ்திரேலியாவில் தலைதூக்கும் புதிய தீவிரவாதம்: வெடிகுண்டுகளுடன் சிறுவன் கைது

ஆஸ்திரேலியாவில் வீட்டில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக மெல்போர்ன் நகரின் புறநகர்ப்பகுதியான கிரீன்வேலியில் உள்ள வீட்டில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று மாலை அங்கு மத்திய மற்றும் மாநில போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு மாடிகள் கொண்ட அந்த வீட்டின் ஒரு அறையில் உயிர்ப்புள்ள 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெடிகுண்டுகளை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.

இதுதொடர்பாக அந்த வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டில் வெடிகுண்டுகள் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவது காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மாதம் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply