LLRC பரிந்துரைக்கமைய லண்டனில் பேச்சு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே அரசாங்கம் புலம் பெயர் தமிழர் களுடன் வெளிப்படையாக பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் இதில் எவ்வித இரகசியமும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார். இதேவேளை, புலம்பெயர் தமிழர்களுடன் லண்டனில் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து இலங்கையில் இவ்வருடம் புலம்பெயர்ந்தோருக்கான விழா (Diaspora Festival)  ஒன்றை நடத்துவதன் மூலம் வருடந்தோறும் அதனை தொடர்ந்து முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிவிவகார அமைச்சில் வாராந்தம் நடக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இங்கு அரசாங்கம் லண்டனில் தமிழ் டயஸ்போராவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதா? என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சின் பேச்சாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

கடந்தகால கசப்பான அணுபவங்களை மறந்து இன, மத பேதமின்றி நல்லிணக் கத்திற்காக ஒத்துழைப்பு வழங்க முன்வரும் அனைவரின் உதவிகளையும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக விருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

பேச்சுவார்த்தையில் டயஸ்போரா சார்பில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த நபர் பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக செயற்பட்டிருந்தாரென்ற அடிப்படையில் அவர் நம்பிக்கைக்குரியவரென வெளிவிவகார அமைச்சு கருதுகின்றதாவென்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்தகால அரசியலை திருப்பி பார்த்தால் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள இயலாது. எமக்கு தனி நபர் அல்லது அமைப்பு மீது நம்பிக்கை கொள்வதனை விட நல்லிணக்கச் செயற் பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதே இலக்காகுமென்றும் அவர் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விஜயம் செய்து பலதரப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பல சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

அந்த சிபாரிசுகளுக்கமைய நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைத்து இனங்களுக் கிடையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய அதேநேரம் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியது அவசியமாகுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து இனங்களைச் சேர்ந்த டயஸ்போராவுடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதென்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply