நிதி மோசடிகள் எனது காலத்தில் இடம்பெற்றிருந்தால் நிரூபிக்கட்டும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் சவால்

எனது பதவிக் காலத்தில் இலங்கை மத்திய வங்கியில் நிதி மோசடிகள் இடம்பெற்று இருந்தால் அவற்றை நிரூபித்துக் காட்டுங்கள் என்று அவ்வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவார்ட் கப்ரால் சவால் விடுத்துள்ளார். இலங்கை மத்திய வங்கி ஆளுநராகத் தாம் பதவி வகித்த காலத்தில் எந்த நிதி மோசடியுமே இடம்பெறவில்லை என்பதைத் தம்மால் உறுதிபடக் கூற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். திறைசேரி நிதி முறி விநியோக மோசடியை மூடி மறைக்கவே தமக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

தினகரன் நாளிதழுக்கு வழங்கிய விசேட பேட்டியின் போதே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவார்ட் கப்ரால் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், நான் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் அதாவது 2005ல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டேன். அப்போது இந்நாட்டின் தனிநபர் வருமானம் 1350 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. அது ஒன்பது வருடங்கள் கழிந்த பின்னர் 3650 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. அதேபோன்று 2005ல் 24 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட இந்நாட்டு பொருளாதாரம் ஒன்பது வருடங்கள் கழிந்த பின்னர்

75 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்தது. நாம் நல்லவைகளையே செய்துள்ளோம் என்பதையே இவை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இந்தப் பொருளாதார வளர்ச்சியை கடந்த காலத்தில் இருந்த எதிர்க் கட்சி விரும்பவில்லை.

அதனால் எனக்கு எதிராகவும் மத்திய வங்கிக்கும், நிதியமைச் சுக்கும் எதிராகவும் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. சேறு பூசும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

உலகிலுள்ள தற்போதைய சட்ட ஏற்பாடுகளின்படி பெருந்தொகையான நிதியை வெளிநாடுகளுக்கு அனுப்பவோ, வெளிநாடுகளிலிருந்து இங்கு கொண்டு வரவோ முடியாது.

அது மாத்திரமல் லாமல் சட்டத்தின் பிடியில் அகப் படாமல் இதனை செய்யவும் முடியாது.

ஐக்கிய அமெரிக்கா பயங்கரவாதி களுக்குப் பணம் செல்லுவதை தடுக்கும் சட்டத்தையும் பண மோசடி தொடர்பான சட்டத்தையும் 2002 – 2003 இன் பின்னர் கொண்டு வந்தது. இச்சட்டங்களை உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. அதன் காரணத்தினால் அனைத்து வங்கி களுமே மிகுந்த முன்னெச்சரிக்கைகளு டனேயே நிதி நடவடிக்கைகளைக் கையாளுகின்றன.

ஆகவே ரில்லியன் பில்லியன் டொலர்கள் அல்ல முடிந்தால் ஒரு இலட்சம் டொலர்களையாவது பிரச்சினைகள் இல்லாது அனுப்பியோ அல்லது கொண்டு வந்தோ காட்டுமாறு நான் சவால் விடுக்கின்றேன்.

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழு, இலங்கை மத்திய வங்கியின் கணக்காய்வு குழு, சர்வதேச நாணய நிதியம் என்பன மேற்கொண்ட ஆய்வுகளிலும் கூட மோசடிகள் இடம்பெற்றதாக கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply