ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம்

தமிழுக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறந்த சேவை ஆற்றுகிறார் என்று ஆஸ்திரேலியா நாட்டுபாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.ஆஸ்திரேலிய நாட்டு பாராளுமன்றத்தில், ஹைன்த் மார்ஷ் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மெட் வில்லியம்ஸ் பேசுகையில், “அடிலெய்டு தமிழ்ச்சங்க செயல்பாடுகள் மற்றும் 2 நாள் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கு ஆகியவை பாராட்டத்தக்கது. தமிழுக்கும், தமிழ் கலாசாரம் மற்றும் கலைகளுக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிவரும் சிறந்த சேவைகள் சிறப்பானது” என்று புகழாரம் சூட்டினார்.

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான அடிலெய்டு நகரில் தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு சமீபத்தில் 2 நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய சமூக நலத்துறை மந்திரி ஸோயி பெட்டிசன், பன்னாட்டு கலாசாரத்துறை மந்திரி கிரேஸ் போர்ட் டோலெசி, மேயர் ஏஞ்சலா கெனேலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் அரசு கொறடவுமான துங்னோ, எதிர்க்கட்சி தலைவர் டேவிட் ரிட்ஜ்வே

ஆகியோர் பங்கேற்று தமிழின் பெருமை பற்றியும், தமிழ் கலாசாரத்தின் சிறப்பு பற்றியும், தமிழர்களின் விருந்தோம்பல் பற்றியும் பாராட்டி பேசினார்கள். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அடிலெய்டு தமிழ் சங்கத்தின் தலைவர் ப.லாரன்ஸ் அண்ணாதுரை

எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தங்களின் தலைமையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்படுவது குறித்து மகிழ்ச்சி. அதிலும் தமிழ் வளர்ச்சித் துறை தமது பணியை உலகளவில் நீட்டித்து எங்களின் அடிலெய்டு தமிழ்ச்சங்கம் வரை புது உறவை ஏற்படுத்தி மகிழ்ச்சியை மட்டுமல்லாமல் புதுவித நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. உங்கள் ஆசியோடு மார்ச் 27-ந்தேதி அடிலெய்டு நகரில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியான மயக்கும் மண்வாசனை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மந்திரிகள், மேயர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழர்களின் பண்பாட்டு கலைகளின் சிறப்பை உணர்ந்து மகிழ்ந்தார்கள் என்பது உண்மை. மேலும் தமிழர்களின் கலைகளை வெகுவாக பாராட்டினார்கள்.

இந்த கலை நிகழ்ச்சியின் மூலமாக தெற்கு ஆஸ்திரேலிய தமிழ் மக்களாகிய எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் தமிழ்நாடு

இயல் இசை நாடக மன்ற கலைஞர்கள் ஏற்படுத்தி சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை எங்களுக்காக வழங்கிய உங்களுக்கு இதயம்

நிறைந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply