கேரளா விமான நிலையத்தில் மோதல் : பாதுகாப்பு படை வீரர் பலி

கேரள மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், விமான நிலைய ஊழியர்களுக்கும் இடையே நடந்த மோதலில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். கோழிக்கோட்டில் உள்ள கரிபூர் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்றிரவு திடீரென தகராறு ஏற்பட்டது.  இது  மோதலாக மாறிய நிலையில்   இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலான வெடித்ததில், மற்றொரு பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் பதற்றம் நீடித்த நிலையில், கோழிக்கோடு வரவிருந்த விமானங்கள் கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. உடனடியாக அங்கு விரைந்த மாலப்புரம் காவல் கண்காணிப்பாளர் இருதரப்பினரிடம் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply