கதிரியக்க பொருட்கள் மூலம் அணு குண்டு தயாரிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்: ஆஸ்திரேலிய

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயுதங்களை பெருக்குவதே தங்களது அடுத்த நோக்கம் என தங்களது பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜுலிபிஷப் கடந்த வாரம் பெர்த் நகரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது ஈராக் மற்றும் சிரியாவில் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களை பறிமுதல் செய்து தங்கள் வசம் வைத்துள்ளனர். அவற்றை ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆராய்ச்சி கூடங்களில் இருந்து எடுத்துள்ளனர். அவற்றை வைத்து பேரழிவை உண்டாக்கும் அணு குண்டு தயாரிக்க முடியும்.

ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து அணுகுண்டு கடத்தியுள்ளனர். அதன் மூலம் இன்னும் ஒரு வருடத்தில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதை நேட்டோ படையினர் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தவிர அவர்கள் விஷ வாயு குண்டுகளையும் தயாரிக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply