சர்­வ­தேச விசா­ர­ணைக்கும் அரசு அனு­மதி வழங்­கும்

எமது ஆட்­சிக்­கா­லத்தில் பலப்­ப­டுத்­திய தேசிய பாது­காப்பை இந்த அர­சாங்கம் கேள்­விக்­கு­றி­யாக்­கி­விட்­டது. சர்­வ­தேச மட்­டத்தில் இயங்­கி­வரும் புலி­க­ளுடன் அர­சாங்கம் தொடர்­பு­பட்­டுள்­ளது என்று எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா குற்றம் சாட்­டினார். போர்க்­குற்­றச்­சா­ட்டுகள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணைக்கும் இந்த அர­சாங்கம் அனு­மதி வழங்கும், ஆட்சி மாற்­றதின் நோக்­கமும் அதுவே எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். விடு­தலைப் புலி­களின் சர்­வ­தேச வலை­ய­மைப்பு தொடர்ந்தும் செயற்­ப­டு­வ­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் தீவி­ர­வாத முறி­ய­டிப்பு பிரிவு தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

விடு­தலைப் புலிகள் பயங்­க­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் இலங்­கையில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதே தவிர அவர்­களை முழு­மை­யாக அழிக்­க­வில்லை. இவர்­களின் செயற்­பா­டுகள் இன்று சர்­வ­தேச அளவில் நடை­பெற்று வரு­கின்­றன. மேற்கு உலக நாடு­களின் விடு­தலைப் புலி­களின் அமைப்­பு­களும் புலம்­பெயர் தமிழர் அமைப்­பு­களும் ஒன்­றி­ணைத்து செயற்­ப­டு­கின்­றன.

இது எமக்கும் நன்­றா­கவே தெரியும். இவர்­களால் எமது நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் எந்த நேரத்­திலும் அச்­சு­றுத்தல் உள்­ளது. இன்று புலி­க­ளுக்கு அடைக்­கலம் கொடுத்த நாடு­களே அவர்­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் விமர்­சிக்க ஆரம்­பித்து விட்­டன. அமெ­ரிக்கா, கனடா. பிரித்­தா­னியா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­களில் புலி­களின் பல­மா­ன­தொரு வலை­ய­மைப்பு இயங்கி வரு­கின்­றது. ஆனால் அந்த நாடு­க­ளுக்கே இது அச்­சு­றுத்­த­லான விட­ய­மாக மாறி­விட்­டது.

அதேபோல் கடந்த காலத்தில் எமது ஆட்­சியில் புலி­களை தலை­தூக்க அனு­ம­திக்­க­வில்லை. யுத்­தத்­துக்கு பின்­னரும் வடக்கில் புலி­களை நினை­வு­கூரும் வகையில் ஒரு சில செயற்­பா­டுகள் நடக்­க­வி­ருந்த போதிலும் எமது அர­சாங்கம் அவற்றை தடுத்து நிறுத்­தி­யது. புலம்­பெயர் அமைப்­புகள் இலங்­கையை ஆக்­கி­ர­மிக்க நினைத்த போதிலும் நாம் கவ­ன­மாக பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம்.

ஆனால் இந்த அர­சாங்கம் வடக்கில் விடு­த­லைப்­பு­லி­களின் அனுஷ்­டிப்பு நிகழ்­வு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. வடக்கில் மாவீரர் தினம், முள்­ளி­வாய்க்­காலில் புலி­களை நினை­வு­கூர அனு­ம­தித்­துள்­ளனர். இவை அனைத்தும் சர்­வ­தேச புலிகள் அமைப்பின் தூண்­டு­தலில் தான் இடம்­பெ­று­கின்­றது.

மேலும் சர்­வ­தேச புலிகள் அமைப்­பு­க­ளுடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இணைந்து லண்­டனில் மாநாடு நடத்­தவும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட ஒரு சிலரும் இந்த கூட்­டத்தில் கலந்து கொண்­டுள்­ளனர். ஆகவே இந்த அர­சாங்கம் சர்­வ­தேச அமைப்­பு­களின் வழி­ந­டத்­த­லுக்கு அமைய செயற்­ப­டு­கின்­றது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் நாம் நாட்டில் பாது­காப்பை பலப்­ப­டுத்­தி­யி­ருந்தோம். புலம்­பெயர் அமைப்­பு­களின் எந்­த­வொரு செயற்­பாட்­டுக்கும் நாம் இலங்­கையில் அனு­மதி வழங்­க­வில்லை. ஆனால் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து ஆறு மாதங்­களில் நாட்­டுக்கு அச்­சு­றுத்­த­லான பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. புலி­களின் இணை­ய­த­ளங்கள் இலங்­கையில் இயங்க ஆரம்­பித்­துள்­ளது. புலம்­பெயர் தமி­ழர்­களை மீண்டும் நாட்­டுக்குள் கொண்­டு­வர அர­சாங்கம் முயற்­சி­களை எடுக்­கின்­றது. சர்­வ­தேச புலிகள் அமைப்­பு­க­ளுடன் வெளி­நா­டு­களில் உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர்.

மேலும் இலங்­கையின் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் அறிக்கை செப்­டெம்பர் மாத­ம­ளவில் வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்கும் நிலையில் இந்த அர­சாங்கம் சர்­வ­தேச விசா­ர­ணை­களை இலங்­கையில் மேற்­கொள்ள அனு­மதி வழங்கும்.

இலங்கை இரா­ணு­வத்தின் மீது பொய்­யான போர்க் குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி எமது இரா­ணு­வத்தை தண்­டிக்­கவே இந்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. எமது அர­சாங்கம் மிகவும் தெளி­வான ிகவும் தெளிவான வகையில் போர்க்குற்ற விசாரணைகளை கையாண்டது. எந்த வகையிலும் எமது ஆட்சியில் கையாண்ட விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறை கூற முடியாது. நாம் எமது இராணுவத்தை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். ஆனால் இந்த அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த நோக்கத்துக்காகவே என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply