பாகிஸ்தானில் வெயில் உக்கிரம்: சிந்து மாகாணத்தில் மட்டும் 141 பேர் பலி

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் மட்டும் 141 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக கராச்சியில் மட்டும் 132 பேர் பலியாகினர்.சிந்து மாகாணத்தின் உள் பகுதிகளான தட்டா மற்றும் தர்ப்பர்கரில் 9 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடல் வறட்சி மற்றும் வெப்ப பக்கவாதம் காரணமாக தட்டாவில் 5 பேரும், தர்ப்பர்கரில் 4 பேரும் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் அம்மாகாணத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது. இதனையடுத்து கராச்சி உள்ளிட்ட மாகாணத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாகாண முதல் மந்திரி சையது குயாம் அலி ஷா கூறினார்.

வெயிலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனைகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் தடையின்றி வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஷா கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply