ஒபாமா காஃபி சர்ச்சையில் மன்னிப்பு கோரிய இஸ்ரேல் அமைச்சரின் மனைவி

ஒபாமாவை கிண்டல் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்ததற்காக , இஸ்ரேல் நாட்டு உள்துறை அமைச்சர் சில்வன் ஷாலோமின் மனைவி ஜூடி ஷாலோம் நிர்-மோசஸ்  மன்னிப்பு கோரியுள்ளார். ஜூடி ஷாலோம்,  தனது டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை கிண்டல் செய்து  ஜோக் ஒன்றை வெளியிட்டார். அதாவது. ஒபாமாவின் காபி பற்றி உங்களுக்கு தெரியுமா? அது கருப்பு மற்றும் வீக்கானது என்று ட்வீட் செய்தார்.

“Do u know what Obama Coffee is? Black and weak,”

இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது. ’ஜூடி ஷாலோமின் இச்செயல் மிகவும் கர்வம் பிடித்த தனத்தை பிரதிபலிக்கிறது’,’இது மிகவும் இழிவான செயல்’,’இனவாதத்தை தூண்டும் செயல்’ என பல்வேறு தரப்பினரும் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஜூடி தனது ட்விட்டை டெலீட் செய்து விட்டு டிவிட்டரில் ஒபாமாவிடம் மன்னிப்பு கேட்டு டிவீட் செய்துள்ளார்.

ஜூடி அந்நாட்டு ரேடியோவில், வாராந்திர நிகழ்ச்சியை நடத்துவதுடன் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply