இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் சத்தியாகிரக போராட்டத்தில்!
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்தில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும், கட்சியின் தலைவரான முத்து சிவலிங்கம் ஆகிய இருவரும் அட்டன் மல்லியப்பு சந்தியில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சத்தியாகிரக போராட்டத்தில் தீடிரென ஈடுப்பட்டனர். இதன்போது இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில். தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவு பெற்று 1000 ரூபா நியாயமான சம்பள உயர்வு வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்திதுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்போது முதலாளிமார் சம்மேளனம் சில குறிப்புகளை கூறினார்கள். அதற்கு எங்களால் ஒத்துபோக முடியாததன் காரணத்தினால் நாங்கள் தோட்ட தொழிலாளர்களை தொடர்ச்சியாக மெதுவான பணிகளில் ஈடுப்படுமாறு அறிவித்திருந்தோம்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் நிறைவுபெறுகின்றது. இம்முறையும் கூட்டு ஒப்பந்தம் முடிந்து சம்பள உயர்வு தொடர்பாக கம்பனியுடன் பேச்சுவாரத்தை நடத்திய போதிலும் சரியான தீர்வு வழங்கப்படாததன் காரணமாகவே தொழிலாளர்களை மெதுவான வேலை செய்யும் பணியில் ஈடுப்படுமாறு அறிவித்திருந்தோம்.
கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த போதிலும் தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களின் பிள்ளைகளை சிறுவர் நிலையத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு சிறுவர் நிலைய உத்தியோகஸ்தர்களையும் வேலை செய்வதை நிறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சிறு பிள்ளைகள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அத்தோடு தோட்டத்தில் உள்ள வெளிகல உத்தியோகஸ்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகஸ்தர்களையும் தொழில் ஈடுப்பட வேண்டாம் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இவர்களின் வேண்டுக்கோள்க்கிணங்க நேற்று சகல தோட்டங்களிலும் உள்ள உத்தியோகஸ்தர்கள் மாலை முதல் தொழிலுக்கு செல்லவில்லை. தோட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட கொழுந்தும் அத்தோட்டங்களில் உள்ள கொழுந்து மடுவங்களில் கொட்டப்பட்டுள்ளது.
அத்தோடு கொழுந்துகளை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல கூட வாகனங்களை தோட்ட நிர்வாகம் வழங்க மறுத்துள்ளது. சில அரசியல்வாதிகள் தற்போது அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளில் இருக்கின்றவர்கள் கம்பனியுடன் இணைந்து தொழிலாளர்களையும் எங்களையும் காட்டிக்கொடுக்க முயற்சித்துள்ளனர்.
நாங்கள் எங்களது தொழிலாளர்களை காட்டி கொடுக்க இடமளிக்க போவதில்லை அதனாலேயே இன்று நாங்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம். போராட்டத்தில் ஈடுப்பட்டததன் காரணமாக பொலிஸாரும், அரச அதிகாரிகளும் உடனடியாக இவ்விடத்திற்கு வந்துள்ளார்கள்.
தற்போது இது தொடர்பான பேச்சுவாரத்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. போராட்டங்கள் தொழிற்சங்களுக்கும் கம்பனிக்கிடையிலேயே நடைபெறுகிறது. இதற்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளும், சிறுவர் நிலையத்திற்கும்,
தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் எவ்வித தொடர்பும் இலலை எனவும் இவ்வாறு செயல்படுகின்ற கம்பனிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்ததோடு தொழிலாளர்களுக்கு போதிய சம்பளம் பெற்று தரும் வரை நாங்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட போவதாக இவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply