புத்த கயாவில் உள்ள மஹாபோதி கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் செய்தி விடுத்த 3 பேர் கைது
பீகாரின் புத்த கயா நகரில் உள்ள மஹாபோதி கோயில் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் செய்தி விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் மஹாபோதி கோயில் மீது தாக்குதல் நடத்தப்படும் என மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இந்த செய்தி அனுப்பப்பட்ட மொபைல் போனின் தொலைபேசி அழைப்பு விவரங்களின் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஷாநவாஸ், அப்சல் மற்றும் குட்டு என்ற ஜெய்கிஷான் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மூத்த போலீஸ் அதிகாரி மனு மஹாராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து ஷாநவாசிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பழைய பகை ஒன்றில் ஷம்சுதீன் என்பவரை போலியான வழக்கில் சிக்க வைக்க விரும்பி அவரது பெயரில் போலியான ஆவணங்களை கொண்டு ஜெய்கிஷானிடம் இருந்து பெற்ற மொபைல் போனின் வழியே மிரட்டல் செய்தியை அனுப்பி உள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை அனுப்ப உதவியாக இருந்த அப்சலும் கைது செய்யப்பட்டு உள்ளார் என மஹாராஜ் கூறியுள்ளார்.
அந்த செய்தியில், ஜி.டி. சாலையில் 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவார்கள் என்றும் புத்த கோவில் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படும் என்றும் குற்றவாளிகள் குறிப்பிட்டு உள்ளனர். கடந்த ஜூலை 5ந்தேதி மஹாபோதி கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டு இருந்தது என மஹாராஜ் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply