பிர­தான கட்­சிகள் அதி­கா­ரத்தை தக்­க­வைக்­கவே மக்கள் ஆணையை மீறிச் செயற்­ப­டு­கின்­றன

அர­சியல் அதி­கா­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்ளும் சுய­நல நோக்­கத்தில் பிர­தான கட்­சிகள் மக்கள் ஆணையை மீறி செயற்­ப­டு­கின்­றன. ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் செயற்­பா­டுகள் கீழ்த்­த­ர­மா­னவை என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக குற்றம் சுமத்­தி­யுள்ளார்.மக்­களின் மனங்­களை வென்ற கட்சி ஜே.வி.பி.யே ஆகவே மக்­களை தம்­முடன் கைகோர்க்­கு­மாறும் அவர் அழைப்பு விடுத்­துள்ளார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் வேட்­பு­மனு பட்­டி­யலில் நேற்று முன்­தினம் மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பி­னர்கள் கைச்­சாத்­திட்­டனர். இன்று மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் தமது வேட்­பு­ம­னுக்களை தாக்கல் செய்­ய­வுள்ள நிலை யில் மக்கள் விடு­தலை முன்­னணியின் தலைவர் தெரி­விக்­கை­யி­லேயே மேற் ­கண்­ட­வாறு குறி­ப்பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வு­ட­னேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தோற்­க­டிக்­கப்­பட்டார். அதே போல் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மக்­களின் ஆத­வுடன் தான் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கினார். ஆனால் இன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவும் இந்நாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ஒன்­று­பட்டு பொது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளனர்.

அதேபோல் ஒன்­றாக பய­ணிக்க தயா­ரா­கி­விட்­டனர். இந்த செயற்­பா­டா­னது மிகவும் மோச­மான செயற்­பா­டா­கவே நாம் கரு­து­கின்றோம். மக்­களால் ஒதுக்­கப்­பட்ட நபர்­களை அர­சியல் சுய­லா­பத்­துக்­காக மீண்டும் இணைத்து தனது அதி­கா­ரத்தை தக்­க­வைக்கும் நோக்­கத்தில் ஜனா­தி­பதி இவ்­வா­றான மோச­மான செயலை செய்­துள்ளார். இந்த செய­லா­னது மக்­களை முழு­மை­யாக ஏமாற்றும் வகையில் அமைந்­துள்­ளது. அதேபோல் கடந்த­ கா­லத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் முரண்­பட்ட அணி­யினர், ஐக்­கிய தேசியக் கட்­சியை மோச­மாக விமர்­சித்த அணி­யினர் இன்று மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கைகோர்த்­துள்­ளனர். ஆகவே அதி­கா­ரத்தை கைப்­பற்ற இவர்கள் எந்த அடி­மட்ட செய­லையும் செய்ய தயா­ராக உள்­ளனர் என்­பது வெளிப்­பட்­டு­விட்­டது.

வேட்­பு­மனு வழங்க முன்­னரே இவர்­களின் செயற்­பா­டுகள் மோச­மா­ன­தாக மாறி­யுள்­ள­தெனின் தேர்தல் காலத்­திலும், தேர்­தலின் பின்­னரும் இவர்­களின் செயற்­பா­டுகள் எப்­படி அமையும் என்­பதை மக்கள் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். அதேபோல் இவர்­க­ளுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்­பிக்க வேண்டும். இந்த தேர்­தலில் தூய்­மை­யான கட்­சி­யா­கவும் மக்­க­ளுடன் நல்ல உறவை பேணும் வகை­யிலும் தான் மக்கள் விடு­தலை முன்­னணி களத்தில் இறங்­கி­யுள்­ளது. நாம் போட்­டி­யிடும் 22 மாவட்­டங்­க­ளிலும் மிகவும் பல­மான மற்றும் தகு­தி­யான வேட்­பா­ளர்­களை நாம் கள­மி­றக்­கி­யுள்ளோம்.

மக்­களின் மத்­தியில் நல்ல தலை­மை­களை தெரி­வு­செய்ய வேண்டும், தூய்­மை­யான குற்­ற­வா­ளிகள் இல்­லாத, ஊழல் வாதிகள் இல்­லாத நல்ல தலை­மைத்­து­வத்தை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்­பாடு மக்கள் மத்­தியில் உள்­ளது. அதேபோல் மக்கள் எதிர்­பார்க்கும், விரும்பும் சகல தகு­தி­களும் மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பி­னர்­க­ளிடம் மட்டும் தான் உள்­ளது. எல்லா பிரச்­சி­னை­களின் போதும் மக்­களை முதலில் சந்­திப்­பது மக்கள் விடு­தலை முன் ­ன­ணி­யே­யாகும். அனைத்து கட்­சி­ களை விடவும் மக்கள் விடுதலை முன்னணி தூய்­மை­யானது. அதே போல் இம்­முறை தேர்­தலில் நாம் ஏனைய கட்­சி­களை விடவும் முன்­ன­ணியில் மக்­களின் மனங்­களில் இடம்பிடித்­துள்ளோம். ஆகவே இம்­முறை மக்கள் நல்­ல­தொரு வெற்­றியை பெற்­றுத்­த­ரு­வார்கள் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.

அதேபோல் தேர்­தலின் பின்னர் அமை­ய­வி­ருக்கும் பாரா­ளு­மன்றம் மக்­களின் பிரச்­சி­னை­களை சுட்­டிக்­காட்டும், மக்­களின் உரி­மை­களில் வெளிப்­ப­டுத்தும் நாட்டை சரி­யான பாதையில் கொண்டு செல்லும் பாரா­ளு­மன்­ற­மாக அமைய வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் மக்கள் உள்­ளனர். ஊழல் வாதி­க­ளையும், சர்­வா­தி­கா­ரி­க­ளையும் பாரா­ளுமன்றத்­துக்கு அனுப்­பக்­கூ­டாது என்ற முடிவில் மக்கள் உள்­ளனர். ஆகவே மக்கள் விரும்­பக்­கூ­டிய வகையில் தகு­தி­யான வகையில் எமது கட்­சியை தயார்ப்­ப­டுத்தி உள்ளோம். அதேபோல் இம்­முறை மக்கள் தமது மனச்­சாட்­சிக்கு அமைய வாக்களிக்க வேண்டும்.

மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்பதை சிந்தித்து அதற்கமைய வாக்களியுங்கள். மக் களின் மனங்களில் நாம் எப்போ தும் இருப்போம் என்பது உண்மை யேயாகும். ஆனால் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்ற இறுதி முடிவு மக்களிடம் தான் உள்ளது. நாம் மக்களை நம்புகின்றோம், அவர் கள் எமக்கு நல்ல வெற்றியை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply