ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கொடூரம்

ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தினர், சிரியா, ஈராக் நாடுகளின் பகுதி களை ஆக்கிரமித்து, அங்குள்ள பிற பிரிவினரை கொன்று குவித்து வருகின்றனர். தங்களிடம் சிக்கிய ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைகளை வெட்டுவது வழக்கம். இந்நிலையில் ஈராக்கின் தியாலா மாகாண பாதுகாப்பு கமிட்டி தலைவர், சாதிக் எல் – உசேனி, நேற்று கூறியதாவது:

ஐ.எஸ்., இயக்கத்தைச் சேர்ந்தவரை கொன்ற நபரை, கடந்த வாரம், பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். சில நாட்களுக்கு முன், அந்த நபரின் குழந்தையை, வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான பயிற்சிக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர். அந்த குழந்தையைச் சுற்றி குண்டுகளை போட்ட பயங்கரவாதிகள், அதை, ‘ரிமோட்’ மூலம் வெடிக்கச் செய்தனர். இதில், அந்த குழந்தை, உடல் சிதறி உயிரிழந்தது.இதற்கு முன், ஐந்து வயது சிறுவன் ஒருவனை, கத்தியால் இரு துண்டுகளாக வெட்டி, தங்கள் கொலைவெறிக்கு தீனி போட்டுள்ளனர். கடந்த 2013ல், 40 நாள் ஆன குழந்தையின் தலையை வெட்டி, படுகொலை செய்தனர். இவ்வாறு, உசேனி கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply