ஜப்பானில் உலகின் மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது
உலகின் மிகப்பெரிய பூவான Titan arum, ஜப்பானில் மலர்ந்துள்ளதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, அதனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். தாவர வகைகளில் Araceae குடும்பத்தை சேர்ந்த Titan arum உலகின் மிகப்பெரிய பூ, பூக்கும் தவாரமாகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் இத்தாவரம், ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் அமைந்துள்ள ஜிண்டாய் தாவரவியல் பூங்காவில் தற்போது மலர்ந்துள்ளது. 6 அடி வளர்ந்துள்ள இந்த பூவை பார்வையிடுவற்காக ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பூங்காவிற்கு சென்ற வண்ணம் உள்ளனர். சுமார் 40 வருடங்கள் வாழ்நாளைக் கொண்ட இந்த தாவரத்தின் பூ, 10 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.
அரிய வகையான இந்த தாவரத்தின் பூ, 5 நாட்கள் மட்டுமே வாடாமல் இருக்கும் என்பதால், ஜப்பான் மக்கள் அந்த பூவுடன் சேர்ந்து ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply