கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம்: மேலும் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமெண்டல் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். இலக்கத்தகடற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் கார் மற்றும் வெள்ளை வேன் ஆகியவற்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் புளுமெண்டல் – பெனடிக் படசாலையின் மைதானத்துக்கு முன்னால் உள்ள பாதையில் வைத்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதில் பெண்ணொருவர் நேற்று பலியானதுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply