போராளிகளின் சுதுமலைக் கூட்டத்துக்கு மானிப்பாய் பொலிஸ் அனுமதி மறுப்பு

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி தனது தேர்தல் விஞ்ஞானபத்தை இன்று செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 4 ஆம் திகதி) மாலை சுதுமலை அம்மன் கோயில் வீதிச் சுற்றாடலில் வைத்து வெளியிடத் தீர்மானித்திருந்த போதிலும், அதற்கான கூட்டத்துக்குரிய அனுமதியை வழங்க மானிப்பாய் பொலிஸார் மறுத்தமையை அடுத்து அந்நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1987 இல் இதே ஓகஸ்ட் 4 ஆம் திகதியன்று இதே சுதுமலை அம்மன் கோயில் சுற்றாடலில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்துத்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமது முக்கிய அரசியல் முடிவுகள் அடங்கிய உரையை ஆற்றியிருந்தார்.

அதே இடத்தில், அதே தினத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு முன்னாள் புலிகள் எடுத்த முயற்சி பொலிஸ் அனுமதி மறுப்புக் காரணமாக கைகூடாமல் போயுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply