மஹிந்தவின் விசேட சலுகைகள் மனுமீதான விசாரணை இன்று
தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியென்ற ரீதியில் ஏனைய வேட்பாளர்களைவிட அதிகமான சலுகைகளுடன் போட்டியிடுவதாகவும், இதனால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் புதிய சமசமாஜக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் சேனக பெரேரா வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஜுலை மாதம் 17ஆம் திகதி உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன் றையதினம் நடைபெறவுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply