ராஜபக்ஷ குடும்பத்தையே சிறையில் அடைத்திருக்க முடியும் :ரணில்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நடந்ததைபோல நாம் இருந்திருந்தால் ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்களையே சிறையில் அடைத்திருக்க முடியும் என்றும்,நாம், சட்டத்தின் பிரகாரமே நடப்போம். இவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு நான் கொண்டுவந்திருந்தேன் என்றும், மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும்,மத்திய வங்கியின் ஆளுநர் பிழைகளை செய்யவில்லை என்பது விசாரணை குழுவினால் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆளுநரின் மருமகனுக்கு நேரடியாகத் தொடர்புடைய நிறுவனமான பேர்பேச்சுவல் ட்ரெஸறீஸ் தனியார் நிறுவனம், மத்திய வங்கியிடமிருந்து எவ்வாறு பணம் பெற்றுகொள்ள முடியும் என்பது தொடர்பிலும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும்,ஏவ்வாறாயினும் பேர்பேச்சுவல் ட்ரெஸறீஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நிவாட் கப்ராலின் சகோதரி என்று தெரியவந்திருப்பதாகவும்,ராஜபக்ஷவின் ஆட்சி போன்று மக்களுக்கு நாங்கள் தண்டனை வழங்கமாட்டோம். என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply