55வது படையணியின் கட்டுப்பாட்டுக்குள் பட்டிக்கரை பிரதேசம்.
சாலைப் பிரதேசத்துக்கு தெற்காக 55வது படையணியினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடந்த மார்ச் 17ம் திகதி நடந்த கடும் மோதலைத் தொடர்ந்து பட்டிக்கரைப் பகுதியில் தமது முழுக்கட்டுப்பாட்டை 55வது டிவிசன் கொண்டு வந்துள்ளனர். இதே வேளை இப்பகுதிக்கு தெற்காக புலிகள் அமைத்திருந்த பாரிய மண் அணைக்கட்டை படையினர் கைப்பற்றி புலிகளுக்கு கடும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பட்டிக்கரைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் சினைப்பர் தாக்குதலில் 8 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply