ம.பி. வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு

mp_blastமத்திய பிரதேசத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. சட்டவிரோதமாக அந்த கட்டடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களே இந்த விபத்திற்கு காரணம் என புகார் எழுந்துள்ள நிலையில் நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா  மாவட்டத்தில் உள்ள பெத்லவாத் என்கிற நகரின் பேருந்து நிலையம் அருகே 3 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் ஒன்று அமைந்திருந்தது. அந்த கட்டிடத்தில் நேற்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் முழுவதும் தரை மட்டமானது. பரபரப்பான வீதியில் அமைந்திருந்த அந்த வணிக வளாகத்திற்குள் அமைந்திருந்த ஓட்டலில் விபத்து நிகழ்ந்த நேரத்தில் ஏராளமானோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இதனால் தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியானார்கள். பலி எண்ணிக்கை தற்போது 104 ஆக உயர்ந்துள்ளது. 

 

150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் கட்டிடத்தின் தரைத் தளத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வெடித்ததே விபத்திற்குக் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதையடுத்து நீதி விசாரணை நடத்த மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட சென்றபோது இந்த தகவலை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply