ஜெர்மனி மேயராக இந்திய வம்சாவளி வேட்பாளர்?
ஜெர்மனியில், நாளை, மேயர் தேர்தல் நடைபெறுகிறது.இதில், பான் நகர மேயர் வேட்பாளராக, பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன்
டெமாக்ரடிக் யூனியன் -சி.டி.யு., கட்சியைச் சேர்ந்த, அசோக் ஸ்ரீதரன், 49, களமிறங்கியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், சமூக ஜனநாயக கட்சி – எஸ்.பி.டி., வேட்பாளர் பீட்டர் ருஹென்ஸ்ட்ரோத் பாயரை விட, கூடுதல் ஓட்டுகளை பெறுவார் என, கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.எனினும், கருத்துக் கணிப்பில் நடுநிலை வகித்த,26 சதவீத வாக்காளர் களின் ஓட்டு தான், வெற்றியைதீர்மானிக்கும்.
இந்திய தந்தைக்கும், ஜெர்மனி தாய்க்கும் பிறந்த அசோக் ஸ்ரீதரன், கோனிங்ஸ்வின்டர் நகர துணை மேயராகவும், கருவூலத் துறை தலைவராகவும் உள்ளார். இவர் வெற்றி பெற்றால், ஜெர்மனியில், முக்கிய நகரின், முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற சிறப்பை பெறுவார்.
பான் நகரின் மேயர் பதவியை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சி.டி.யு., தக்கவைத்துக் கொண்டுள்ளது. இம்முறையாவது, எஸ்.பி.டி., கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முந்தைய தலைநகரம்: கடந்த, 1939, செப்., 1 முதல், 1945, செப்., 2 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஜெர்மனி பிளவுபட்டது. பான், மேற்கு ஜெர்மனியின் தலைநகராகவும், பெர்லின், கிழக்கு ஜெர்மனியின் தலைநகரமாகவும் விளங்கின. இந்நிலையில், 45 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990, அக்., 3ல், கிழக்கு – மேற்கு ஜெர்மனி நாடுகள் ஒன்றாக இணைந்தன.
ஒன்றுபட்ட ஜெர்மனியின் தலைநகராக பெர்லின் உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply