தமிழ் அரசியல் கைதிகள் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிக்க தீர்மானம்

prisionதமிழ் அரசியல் கைதிகள் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் “தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுவிக்க வேண்டியது அவசியம். அரசியல் கைதிகள் விடயத்தில் இனியும் இழுத்தடிப்புப் போக்கு மேற்கொள்ளக்கூடாது. இம்மாதம் 7ம் திகதிக்குள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

ஆனால், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது கடினமாக உள்ளது. அதனால் கட்டம் கட்டமாக அவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று அரச தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.

தெகிவளை குண்டுத் தாக்குதல் உட்பட பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவது கடினமாகும் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அரசியல் கைதிகளில் 32 பேரை முதற்கட்டமாக பிணையில் விடுதலை செய்வது என்றும் இரண்டாம் கட்டமாக 30 பேரை பிணையில் விடுவிப்பது என்றம் ஏனையவர்கள் விடயம் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவை அமைத்து ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளாககக் கருதப்பட்டு நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் விடயத்தில் அரசாங்கமானது எத்தகைய நடவடிக்கையினையும் எடுக்க முடியாது. ஜனாதிபதியே இவ்விடயத்தில் முடிவுசெய்ய வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர, கூட்டமைப்பு எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply