மியன்மார் தேர்தல் வெற்றி: ஆங்சாங் சூகிக்கு வாழ்த்து

maithiriமியன்மார் தேர்தலில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளமைக்காக அந்தக் கட்சியின் தலைவியும் நோபல் பரிசு பெற்றவருமான ranilஆங்சாங் சூகிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நவம்பர் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொண்டதில் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

மியன்மார் மக்கள் வழங்கிய இந்த உறுதியான ஆணையானது அந்த நாட்டை எதிர்காலத்தில் செழிப்பு மற்றும் வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் தங்களது எழுச்சிமிக்க தலைமைத்துவத்தின் மீது, அவர்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடு என, அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

கடந்த காலங்களில் தங்களது நாட்டில் இடம்பெற்ற ஜனநாயகத்திற்கான அமைதிப் போராட்டங்களில் ஜனநாயகத்தை ஏற்படுத்திய தேசிய கட்சியின் தனிப்பட்ட சாதனையே இது என ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை ஜனநாயகத்திற்கான சமரசமற்ற போராட்டத்தில் தங்கள், தங்களது கட்சியினதும் அயராத போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியே இதுவென பிரதமர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மியன்மாரின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

மியன்மாரின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் பல வருடங்களாக தனது பிடியில் வைத்திருந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அங்கு ஜனநாயக ரீதியான பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.

 

இந்த தேர்தலில் இராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான ஒற்றுமைச் கட்சிக்கும் ஆங்சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

 

ஆங்சாங்சூகி தான் போட்டியிட்ட காஹ்மூ தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியதோடு,அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.முன்பு அவரிடம் ஆட்சியை ஒப்படைக்கமறுத்த இராணுவ ஆட்சியாளர்கள் தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply