கூட்டமைப்புடன் உள்ள முரண்பாடு தொடர்பில் விக்னேஸ்வரன் விளக்கம்

VIKIவடக்கின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் வை.கே.சிங்ஹா தெரித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இந்திய உயர்தானிகர் வை.கே.சிங்ஹாவிற்கும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை முதலமைச்சர் இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போதே இந்திய உயர் ஸ்தானிகர் இதனை தெரிவித்தாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

எமது நாட்டின் இனங்கள் தொடர்பிலான மாற்றங்கள், மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அவற்றின் ஊடாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்ற விடையங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இதன்போது இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினையினை அரசியல் ரீதியாக பார்க்கும் போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இரு நாட்டு மீனவர்களையும் பேச வைத்தால், பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான முரண்பாடு தொடர்பிலும் இந்திய உயர் ஸ்தானிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர்,

எமக்கிடையில் கொள்கைகள் வித்தியாசத்தினால் மட்டும் முரண்பாடு இருக்கின்றதே தவிர வேறு எந்த முரண்பாடுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அதிகமான மக்கள் முரண்பாடுகள் இருப்பதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து போய்விடும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply