வரலாறு காணாத அளவில் ஹிராகுட் நீர்தேக்கத்தில் குவிந்த 95 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள்
ஒடீசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பெரிய அணைகளுள் ஒன்றான ஹிராகுட் அணையின் ஏரிப்பகுதியில் வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.
சென்ற வார இறுதியில் ‘வாட்டர்பவுல்’ சென்சஸ் கணக்கெடுப்பு நடத்தியதில் இதுவரை இல்லாத வகையில் 95,912 பறவைகள் ஹிராகுட் நீர்தேக்கத்தில் குவிந்துள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவையினங்களும் வந்துள்ளன. குறிப்பாக, டப்டட் டக், கிரேட் கிரெஸ்டட், காமன் கூட், காமன் பொச்சார்டு, விசிட்டிலிங் டக் ஆகிய பறவைகளும் குவிந்துள்ளன. 746 சதுர கீமீ பரப்பளவுள்ள இந்த நீர்தேக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத முதல் வாரத்தில் இருந்து பறவைகள் வர ஆரம்பிக்கும். பிறகு, மார்ச் மாதத்தில் இருந்து திரும்ப சென்று விடும். பறவைகளின் சொர்க்கமாக திகழ்ந்து வரும் இந்த இடத்திற்கு குளிரை போக்கிக் கொள்வதற்காகவே அவை வருகின்றன. குறிப்பாக, இமாலய மலைப் பகுதி, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா, மங்கோலியா, ஆரல் கடல், பெய்கால் ஏரி, கேஸ்பியன் கடல் ஆகிய பகுதிகளில் இருந்து பறவைகள் வருகின்றன. மிதமான வானிலை, நீர்தேக்கத்தை சுற்றி அழகான மலைகள், பறவைகளுக்கு கிடைக்கும் உணவுகளே இவ்வளவு தூரம் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகை தருவதற்கு காரணம். தொடர்ந்து பறவைகளின் வருகையை கண்காணிப்பதற்கு 5 பேர் வீதம் கொண்ட 14 குழுக்கள் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. பறவைகள் பீல்டு கைடு, சென்சஸ் ஷீட்டுகள், பைனாகுலர்களும் அவர்களுக்கு தரப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு இந்த நீர்தேக்கத்திற்கு 63 அரிய வகை இனங்களை சேர்நத 58 ஆயிரம் பறவைகள் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply