தேர்தல் களத்தில் அதிமுக தீவிரம்: மனுக்கள் விநியோகம் தொடக்கம்
புதுச்சேரி மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை பத்தரை மணிக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை நாள்தோறும் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவத்திற்கு 11 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவம் 5 ஆயிரம் ரூபாயாகவும், கேரளாவிற்கு 2 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply