லிபியா அருகே கடலில் படகு கவிழ்ந்து 30 அகதிகள் பலி: 50 பேர் உயிருடன் மீட்பு

libiyaலிபியா உள்பட சில நாடுகளில் நடந்துவரும் உள்நாட்டு போர் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் படகுகள் மூலம் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், சுமார் 100 பேர் லிபியாவில் இருந்து இத்தாலிக்கு ஒரு படகில் மத்தியதரைக்கடலில் சென்று கொண்டிருந்தனர்.லிபியா கடலில் இருந்து 35 நாட்டிக்கல் மைல் தூரம் சென்றதும் அந்த படகு அதிகமான ஆட்கள் காரணமாக ஒரு பக்கமாக சாய்ந்தது. சிறிது நேரத்தில் அந்த படகு கடலில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. இதனால் படகில் இருந்தவர்கள் கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

கைகளை அசைத்து உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்தனர். இதனை அந்த கடல் பகுதியில் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்பெயின் நாட்டின் கடற்படை மற்றும் இத்தாலி கடற்படை கப்பல்கள் கவனித்து அந்த பகுதிக்கு விரைந்து சென்றன.

கடற்படை படகில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50 பேர் வரை மீட்கப்பட்டனர். அதற்குள் பலர் கடலில் மூழ்கி பலியாகி இருந்தனர். கடலில் மிதந்து கொண்டிருந்த சுமார் 30 பேரின் உடல்களையும் கடற்படையினர் மீட்டனர். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகாரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply