படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் : பிரதமர்

ranilநாட்டின் வட பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இராணுவத்தைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட குறிப்பாக நாட்டின் வட பகுதியில் பணியாறறிய முக்கிய அதிகாரிகளை கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் சந்தித்து கலந்ததுரையாடியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கையளிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பிலான திட்ட வரைபுகள் இராணுவத்தினரிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினரின் புள்ளி விபரங்களுக்கு அமைய உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே 58.73 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் இன்னமும் படையினர் வசமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்களின் சில காணிகளில் இடைத்தங்கள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, சில காணிகளில் வேறு சிலரால் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply