சிரியா அமைதி முயற்சிகளுக்கு பின்னடைவு
சிரியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து, பிரதான எதிர்க்கட்சிக் குழுக்களின் தலைமைப் பிரதிநிதி விலகியிருக்கிறார்.சிரியா மக்கள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, நெருக்குதல்களைச் சந்திக்கும் சூழ்நிலையில், ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது சாத்தியமில்லை என பிபிசி அராபிய சேவைக்கு அளித்த பேட்டியில் முகமது அலூஷ் தெரிவித்தார்.
கள நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த ஏப்ரல் மாதம் இடைநிறுத்தி வைக்கப்பட்டன.
சிரியா மக்களின் இன்னல்களைப் போக்குவதற்கு சர்வதேச சமூகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply