அமெரிக்க விமானப்படை தளத்தை வானத்தில் வட்டமிட்ட மர்மப்பொருள் – வேற்றுகிரகவாசிகளின் உளவு பார்க்கும் கருவியா? (வீடியோ இணைப்பு)

eliyanஅமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அந்நாட்டின் மிகப்பெரிய விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகாமையில் சுமார் பத்துமைல் தொலைவில் உள்ள டேட்டன்  நகரில் வசிக்கும் தம்பதியினர் கடந்த 25-ம் தேதி மாலைநேரத்தில் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடி, சூரியன் மறையும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, விமானப்படைத்தளத்தின் மேல்பகுதியில் வானத்தில் ஒரு மர்மப்பொருள் வட்டமிட்டபடி மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர்கள் வியந்தனர். அந்த காட்சியை மிக நெருக்கமாக வீடியோவாக பதிவு செய்துள்ள அவர்கள், வேற்றுகிரகவாசிகளான ‘ஏலியன்ஸ்’ குறித்த ஆராய்ச்சிகளை நடத்தி வரும் ‘செக்யூர் டீம் 10’ என்ற குழுவிற்கு அந்த வீடியோ பதிவை அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள ‘செக்யூர் டீம் 10’ குழு உறுப்பினர்களில் ஒருவர், அந்த மர்மப் பொருள் பறந்த காட்சியை அதே பகுதியில் வசிக்கும் மேலும் மூன்றுபேர் பதிவு செய்துள்ளதாகவும், இது வேற்றுகிரகவாசிகளின் கருவியாக இருக்கும் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே பகுதியின் வான்வெளியில் கடந்த 1947-ம் ஆண்டில் இருந்து 1969-ம் ஆண்டுவரை 12,618 மர்மப் பொருட்கள் காணப்பட்டதாக பதிவாகியுள்ளதால், சமீபத்தில் வீடியோவில் பதிவாகியுள்ள மர்மப்பொருள் வேற்றுகிரகவாசிகளின் உளவு பார்க்கும் கருவியா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=qJWro9Ox8ss

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply