அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

USA அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள கார் சர்வீஸ் செய்யக்கூடிய பணிமனைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதையடுத்து பணிமனையில் இருந்த வெளியே வந்த நபர் அந்த வழியாக சென்ற போலீஸ் அதிகாரியின் காரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் அந்த அதிகாரி படுகாயம் அடைந்தார்.

 

இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் படையினர் விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த மர்ம நபருக்கும், போலீஸ் படைக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் தாக்குதல் நடத்திய மர்மநபர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இந்த துப்பாக்கி சண்டையின் போது போலீஸ்காரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அப்பாவி மக்கள் 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவருடன் வந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply