காங்கிரஸ் இல்லாத இந்தியா: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராவது பற்றி பா.ஜ.க. கிண்டல்

ragulராகுல் காந்தி தலைவரானால் இந்தியாவில் காங்கிரசே இல்லாமல் போய்விடும் என்று ஷா நவாஸ் உசேன் விமர்சனம் செய்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில், ராகுலை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் விமர்சித்து கூறியவை பின்வருமாறு:- 

 

”இது காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம். இருந்தாலும், ராகுல் காந்தியை அக்கட்சியின் தலைவராக ஆக்கினால் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். ராகுல் காந்தி காங்கிரஸ் துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில், அவரை தலைவராக நியமித்தால் மேலும் காங்கிரஸ் இந்தியாவில் சரிவை சந்திக்கும்.” என்று அவர் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply