இந்தியாவின் வரைபடத்தை தவறாக காட்டிய மொராக்கா பல்கலைகழகம்
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மொராக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று, ராபட் நகரில் உள்ள முகம்மது வி என்ற பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். ஹமீது அன்சாரி உரையாற்றும் விழா அரங்கு மேடையில் இந்தியாவின் வரைபடம் தவறாக காட்டப்பட்டு இருந்தது. பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் சேர்த்து பிரிக்கப்படாத இந்தியாவின் வரைபடம் அதில் இடம் பெற்றிருந்தது. இதை, பார்த்த இந்திய அதிகாரிகள் உடனடியாக விழா ஏற்பாட்டார்கள் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ஹமீது அன்சரி வருகைக்கு முன்பாக தவறான இந்திய வரைபடம் நீக்கப்பட்டு விட்டது. பின்னர், மோராக்கா மாணவர்கள் தயாரித்த இந்த காட்சி வரைபடத்தில் ஏற்பட்ட தவறு உடனடியாக நீக்கபப்ட்டு சரியான இந்திய வரைபடம் அமைக்கப்பட்டதாக இந்திய பிரநிதிதிகள் தெரிவித்தனர்.
1999 -ஆம் ஆண்டு அப்போதய இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு பிறகு இந்தியாவின் உயர் மட்ட தலைவர் ஒருவர் ஆப்பிரிக்க நாடான மொராக்கா சென்றது இதுதான் முதல் முறையாகும். மொராக்கா பயணத்தை நிறைவு செய்த ஹமீது அன்சாரி, இரண்டு நாள் பயணமாக துனிஷியா புறப்பட்டுச்சென்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply