93-வது பிறந்த நாள்: கருணாநிதிக்கு தொல்.திருமாவளவன் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
3-6-2016 இன்று 93-ம் பிறந்தநாள் காணும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 80 ஆண்டுகளாக அரசியல் களத்தில் மட்டுமின்றி சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு மகத்தானது. 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையிலும் ஓய்வின்றி உழைக்கும் அவரது ஆளுமை வியப்புக்குரியது. நடந்தேறிய சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, தமிழகம் தழுவிய அளவில் பரப்புரையாற்றியது, அவருடைய மனவலிமை எத்தகைய ஆற்றல் வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டியது.
நேர்மறையான சிந்தனைகளும், அணுகுமுறைகளும்தாம் அவரது வெற்றிக்கு அடிப்படையானவை என்பதையும் காண முடிகிறது. இத்தகைய பேராளுமை கொண்ட கருணாநிதியின் அளப்பரிய பணிகள் மென்மேலும் தொடர, அவர் நூறாண்டுக்கும் மேல் நீடூழி வாழ வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply