ஹிலரி கிளிண்டனை ”சாத்தான்” என்று அழைத்த டொனால்ட் டிரம்ப்

dramதொடர்ந்து தனது சொந்த கட்சியினரிடமிருந்தே கடுமையான தாக்குதல்களை சந்தித்து வரும், அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும், தனது போட்டியாளருமான ஹிலரி கிளிண்டனை ” சாத்தான் ” என்று வர்ணித்ததுள்ளார்.பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் உரையாற்றிய டிரம்ப், ஜனநாயக கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிட கட்சியின் நியமனம் பெறும் போட்டியில், ஹிலரியிடம் பணிந்துவிட்டார் என்று பெர்னி சாண்டர்ஸ் மீது தாக்குதல் தொடுத்தார்.

தொழில் அதிபரான டிரம்ப் உரையாற்றுகையில், ”பெர்னி சாண்டர்ஸ் அந்த சாத்தானுடன் ஒரு ஒப்பந்தம் கொண்டார். ஹிலரி தான் அந்த “சாத்தான் ” என்று கூறினார்.

இராக் போரில் கொல்லப்பட்ட இஸ்லாமியரான அமெரிக்க ராணுவ கேப்டன் (தலைவர்) ஹுமாயுன் கானின் பெற்றோர் குறித்த டிரம்பின் கருத்துக்களுக்கு ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும் ஒன்று போல கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குடியரசு கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளரான ஜான் மெக்கெயினும் டிரம்புக்கு கண்டனம் தெரிவித்தவர்கள் பட்டியலில் அடங்குவார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply