சுவாதியின் நண்பர் பிலாலிடம் மீண்டும் போலீசார் விசாரணை

suwathiசென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி ஜூன் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை தொடர்பாக செங்கோட்டை மீனாட்சி புரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் அடை யாள அணிவகுப்பு நடந்தது. இதில் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடை வைத்துள்ள சிவகுமார் ஆகியோர் அடையாளம் காட்டினர்.

ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்தனர். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வீட்டில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ராம்குமாரை போலீசார் பிடித்தனர். அந்த வீடியோவில் இருந்து ராம்குமார்தான் என்பதை உறுதி செய்ய அவரை வீடியோ படம் எடுக்க கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டு உள்ளனர். அனுமதி கிடைத்ததும் புழல் சிறையில் வைத்து ராம்குமாரை வீடியோ எடுப்பார்கள். அந்த வீடியோவும் பழைய வீடியோவும் ஒப்பிட்டு பார்க்கப்படும்.

சுவாதி கொலை வழக்கில் அவரது நண்பர் முகமது பிலால் அளித்த தகவல்கள் போலீசாருக்கு உதவியாக இருந்தது. சுவாதி தன்னிடம், வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வருவதாக கூறினார் என்று போலீசாரி டம் தெரிவித்து இருந்தார். அவர் அளித்த தகவல்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று முகமது பிலாலிடம் போலீ சார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த விசாரணையில் சுவாதி பின்னால் சுற்றிய வாலிபர் பற்றியும் மற்ற தகவல்களையும் கூறி உறுதிப்படுத்தின. அதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply