லண்டனில் 7 பேரை விரட்டி விரட்டி குத்திய மர்ம மனிதன்: தாக்குதலுக்கு பெண் பலி

londonஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் ரூஸ்செல் சதுக்கம் உள்ளது. நேற்று இரவு 10-30 மணியளவில் அங்கு ஒரு மர்ம மனிதன் சுற்றித் திரிந்தான்.திடீரென அவன் தான் வைத்திருந்த பெரிய கத்தியால் அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கத்தியால் குத்தினான். அதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தனர். ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. காயம் அடைந்த 7 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

அவர் தவிர காயம் அடைந்த 6 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கத்தியால் குத்திய மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர்.

இரவு 10.40 மணிக்கு அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 19 வயது வாலிபரை போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.

அதை தொடர்ந்து அவன் கைது செய்யப்பட்டான். இச்சம்பவம் தீவிரவாத தாக்குதல் தொடர்புடயதாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply