கைதிகளை விடுவிக்க ஈரானுக்கு அமெரிக்கா பணம் கொடுத்ததா?
அமெரிக்கக் கைதிகளை விடுவிப்பதற்காக, ஈரானுக்கு 400 மில்லியன் டாலர் பிணைத் தொகையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மறுத்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையே, பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள, தோல்வியில் முடிந்த ராணுவ தளவாட ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அந்தத் தொகை வழங்கப்பட்டதாக ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்தாகும் நிலையில், இந்தப்பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் உள்பட அக் கட்சியினர், ஈரானுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட நேரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply