சார்க் நாடுகளுடன் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க பாடுபடுவோம்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘சார்க்’ (தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு) உறுப்பு நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாடு இன்று தொடங்கியது.மாநாட்டின் துவக்க விழாவில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.சார்க் நாடுகளுடன் கூட்டாக இணைந்து தீவிரவாதம், ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் ஆகியவற்றிற்கு எதிராக போராடுவதற்கு பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது.
சார்க் நாடுகள் மிகப்பெரிய அளவில் மனித வளத்தையும், இயற்கை வளங்களையும் கொண்டுள்ளது. அதனால் நமது நாட்டு மக்களுக்கு அமைதி மற்றும் வளமையை நம்மால் கொடுக்க முடியும். கொடுக்க வேண்டும்.
வளர்ச்சிக்கான அமைதி மற்றும் அண்டை நாடுகளுடன் அமைதியான நட்புறவை வளர்த்துக் கொள்வதே என்னுடைய அரசின் கொள்கையாகும்.
தன்னுடைய கொள்கைகளையும், சாசனங்களை நிறைவேற்றுவதற்காகவும் சார்க் அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எப்பொழுதும் பாகிஸ்தான் ஆதரிக்கிறது.
சார்க் அமைப்பு சாசனங்களின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை புரிந்து கொள்வது நம்முடைய கூட்டுப் பொறுப்பு ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply