விளையாட்டுத் திருவிழா ‘ஒலிம்பிக்’ இன்று ஆரம்பமாகிறது

olimpicஉலகம் முழுவதும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.இன்று ஆரம்பிக்கும் இப்போட்டிகள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெற்றவுள்ளது.இம்முறை ஒலிம்பிக்கில் 205 நாடுகளை சேர்ந்த 11,178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ரியோ டீ ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெறவுள்ளன. குறித்த மைதானத்தில் 78,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து விழாவை பார்க்க முடியும்.

இதேவேளை தொடக்க விழாவில் பல்வேறு நாட்டின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவினை உலகம் முழுவதும் இருந்து 90 கோடி மக்கள் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக் அணிவகுப்பில் கிரீஸ் நாடு முதலாவதாக அணிவகுக்கிறது. அதே சமயம் ஒலிம்பிக்கை நடத்தும் பிரேசில் கடைசி நாடாக அணிவகுப்பில் பங்கேற்கிறது.

ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து ஜாம்பவான் பீலே ஏற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 75 வயதான கால்பந்து ஜாம்பவான் பீலே, மூன்று உலகக்கிண்ணங்களை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply