கல் வீச்சுக்கு இலக்கான கல்வியதிகாரி உயிரிழப்பு
கொழும்பிலிருந்து வவுனியா ரயிலில் பயணித்த போது, ஒறுகொடவத்த பகுதியில் கல் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவ்வாறு பலியானவர் வட மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் கே.எல்.புஸ்பகுமார எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி பணியின் நிமித்தம், கொழும்புக்கு வந்த அவர், அதனை நிறைவு செய்ததும், கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில், அனுராதபுரத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, ஒறகொடவத்த எண்ணெய்த்தாங்கி பிரதேசத்தில் வைத்து, வெளியிலிருந்து சிலர் எறிந்த கற்களால் தாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தால் ஜன்னல் அருகே இருந்த அவரது தலையில் கடும் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட புஸ்பகுமார, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த நான்கு தினங்களாக சுயநினைவிழந்த நிலையில் அவர் நேற்று இரவு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
03 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து வவுனியா நோக்கி பயணம் பயணிக்கும் கடுகதி புகையிரத்தில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணித்த வேளை வெளியிலிருந்து வீசிய கல் ஒன்று அவரின் தலையை தாக்கியுள்ளது. இதன் பிறகு புகையிரதத்தில் கடமை புரிந்த டிக்கெட் பரிசோதகர் அவரை றாகம புகையிரத நிலையத்தில் இறக்கி வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்துள்ளார்.
என்றாலும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியும் எனக் ௬றி தொடர்ந்தும் பயணித்துள்ளார். நீண்ட நேரம் புகையிரத்தில் பயணித்து பல மணி நேரத்தின் பின் சிகிச்சை பெற அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டைமையால் அவரின் தலையில் உறைந்த இரத்தம் மூளைக்கு சென்று கட்டியாகியுள்ளது. சுய நினைவிழந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பயனளிக்காத நிலையிலேயே அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர் அனுராதபுரம் சாலியபுர பிரதேத்தைச் சேர்ந்த 49 வயதுடைய திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே. ஏ. புஸ்பகுமார எனும் வடமத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் கடமை புரியும் உதவிக் கல்விப் பணிப்பாளராகும்.இவரின் மகள் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் இதன் காரணமாக இம்முறை இவர் பரீட்சைக் கடமைகளை்வேறு ஒருவருக்கு பொறுப்பளித்து அவர் இம்முறை பரீட்சை கடமைகளில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்கள்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
ஓடும் ரயில் மீது கற்களாலும் வெற்றுப் போத்தல்களாலும் தாக்குதல் நடத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பி.ஏ.பி. ஆரியரத்ன தெரிவித்தார்.
ஓடும் ரயிலில் பயணிகள் மீது மிலேச்சத்தனமாக நடத்தப்படுகின்ற இந்த தாக்குதல்களினால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ரயில்வே பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நடவடிக்கைக்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 3ம் திகதி கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மீது களனி பாலத்திற்கு அருகே இனந்தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட கல் மற்றும் வெற்றுப்போத்தல் வீச்சுக் காரணமாக ரயிலில் பயணம் செய்த நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் நேற்று மரணமானார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். படுகாயமடைந்த அந்நபர் அநுராதபுரம் வரை சென்று அங்கு சிகிச்சைப் பெற்ற நிலையில் நேற்று அவர் மரணமானார். இவ்வாறான ஒரு சம்பவம் இனிமேல் நடைபெற இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply