இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்கள் விற்கப்படமாட்டாது : ஜனாதிபதி

maithiriஇலாபம் ஈட்டும் அரச நிறுவனங்கள் எதனையும் விற்பனை செய்ய, கொள்கை அடிப்படையில், எப்போதும் தான் இணங்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நஸ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் நிலைமையை சீராக்க, உற்பத்தியை அதிகரிக்க தனியார் பிரிவினருடன் இணைந்து செயற்பட முடியும் என்றாலும் இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை விற்க ஒருபோதும் தான் இணங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு துறைமுகத்தால் கடந்த வருடம் அரசுக்கு கிடைத்த இலாபம் 40 பில்லியன் எனவும், எதிர்வரும் காலங்களில் அதனை மேலும் அதிகரிப்பதை காண்பதே தனது இலக்கு எனவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply