சீனாவில் வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஜூலை மாதத்தில் மட்டும் 600 பேர் பலி

chinaசீனாவில் வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஜூலை மாதத்தில் மட்டும் 600 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் அலுவல்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.பொருளாதாரத்தை பொறுத்தவரை சுமார் 35 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் நாடு முழுவதும் 1.87 மில்லியன் வீடுகள் சேதாரமடைந்துள்ளது அல்லது முற்றிலும் அழிந்துள்ளது.

சீனா முழுவதும் சுமார் 29 மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வெள்ளம் மற்றும் புயலுக்கு 612 பேர் உயிரிழந்துள்ளனர்.

விவசாயத்தை பொறுத்தவரை சுமார் 7.3 மில்லியன் ஹெக்டர் பரப்பளவிலான நிலங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply