அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

gun fireஅமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் ஹேட்சி நகரம் உள்ளது. இங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு அதிவேகமாக பறந்து வந்த காரை பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்து காரில் வந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரிகளை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு காரை ஓட்டிச் சென்றாள்.

அதில் ஒரு போலீஸ் அதிகாரி குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். உடனே மற்றொரு போலீஸ் அதிகாரி அந்த காரை விரட்டிச் சென்று மடக்கினார்.

இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை. அமெரிக்காவில் ஆப்பிரிக்காவை சேர்ந்த கறுப்பின வாலிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply