அடுத்த வரவு செலவு திட்டம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் : நாமல்

namalநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தின் அபிவிருத்திகளை தேடி பார்க்காத இந்த அரசாங்கம் கடந்த கால ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக தேடி பார்ப்பதற்கு பணத்தையும் நேரத்தையும் வீனாக்குகின்றது.இந்த நிலையில் மஹிந்தவின் குடும்பத்தினரையும், எங்கள் செயல்பாடுகளையும் எப்.சீ.ஐ.டீ என்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கோடி கணக்கில் பணத்தை செலவு செய்து ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இயங்கும் எப்.சீ.ஐ.டீ காரியாலயத்திற்கு சென்றால் அங்குள்ள அனைத்து அறைகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிறேனவின் உருவப்படங்களே காட்சியளிக்கின்றது.

இது ஜனாதிபதியின் பொலிஸ் பிரிவு என்பதாலா ? என பாராளுமன்ற உறுப்பினரும், முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

கினிகத்தேனை ரஞ்சுராவ பிரதேசத்தில் அமைந்துள்ள பீடாஸ் மண்டபத்தில் இன்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க, அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னால் தலைவர் அசோக சேபால மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ;
மாகாண மற்றும் மாவட்டங்கள் ரீதியாகவும், பிரதேசங்கள் ரீதியாகவும் எதிர்வரும் காலத்தில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கென அங்குள்ள அமைப்பாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரை உள்ளடக்கி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாட்டில் அடுத்த வரவு செலவு திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படும் என்பதில் அச்சம் இல்லை எனத் தெரிவித்தார்.

நாட்டில் யுத்த காலத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.

இந்த வகையில் நமது நாட்டு இராணுவத்தினரை இந்த அரசாங்கம் காட்டிக்கொடுக்க செயல்படுகின்றது. ஆனால் எமது அரசாங்கத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளை நம் நாட்டில் உள்வாங்குவதற்கு இடமளிக்கவில்லை.

இந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மட்டுமன்றி கடந்த ஆட்சியில் உள்ள அணைவரும் நிம்மதி இன்றி நித்திரை கொள்ளும் நிலைக்கு அரசாங்க செயல்பாடுகள் காணப்படுகின்றது.

கினிகத்தேனையிலிருந்து கொழும்புக்கு சென்று நேரடியாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லும் நிலையினேயே அரசாங்கம் எம்மீது தினிக்கின்றது. பாதயாத்திரையின் போது எமது கோரிக்கைகளை மக்களோடு இணைந்து கோஷம் இட்டுக்கொண்டு இருக்கையில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது.

அவர்கள் நினைத்தவாறு என்னை சிறைக்கு அனுப்பினர். இது அல்ல அரசாங்கத்தின் வேலை. மக்களுடைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்து மக்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கைப்பற்றினால் உலக நாடுகள் நிதி உதவிகளை செய்வார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கே கூடிய அளவில் அபிவிருத்திக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply